சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதி அறையில் மருத்துவ ஆராய்ச்சி மாணவி மற்றும் பேராசிரியரின் மனைவி ஆகியோர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் மருத்துவ ஆராய்ச்சி மாணவி மகேஷ்வரி என்பவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் ஐ.ஐ.டி, வளாக குடியிருப்பில் வசித்துவரும் பேராசிரியர் கணேசன் என்பவரது மனைவி விஜயலட்சுமியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஐ.ஐ.டி. வளாக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஐ.ஐ.டி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், மருத்துவ மாணவி மகேஷ்வரி உயிரிழப்பு சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும். உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:
Post a Comment