இந்த விவகாரத்தில் திருநாவுகரசுடன் தற்போது சபரிஷ் இன்னும் சிலர் கைது
செய்யப்பட்டுள்ளனர். இதெல்லாவற்றிற்கும் மேலாக பார் நாகராஜர் என்பவருக்கும்
இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. தற்போது நான்குபேரை கைது செய்துள்ள
போலீஸார் அவர்களிடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் அதிமுக
கட்சியைச் சேர்ந்த நாகராஜை அக்கட்சியிலிருந்து தலைமை நீக்கி
உத்தவிட்டுள்ளது.
இதில் தன்னோடு சேர்த்து நான்கு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக
போலீசாரிடம் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். 1000 க்கும் மேற்பட்ட
வீடியோக்கள் தற்போது போலீஸார் வசம் உள்ளதாகவும் தெரிகிறது. போலீஸாரின் கைககளுக்குச் சென்றுள்ள வீடியோவை பிரபல தனியார் செய்தி சேனலின்
இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில்
அரைநிர்வாணத்துடன் இருக்கும் பெண்ணை வீடியோ எடுத்து அந்த பெண்ணை தன் நண்பர்களான திருநாவுக்கர் மற்றும் இன்னும் சிலரின் காம இச்சைக்குப் பலியாக்கியுள்ளார் சபரிஷ். இந்த வீடியோவில் எவ்வளவோ தூரம் கெஞ்சியும் விடாமல் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதேபோல இன்னொரு வீடியோவில் அண்ணா விட்ருங்கண்ணா என கதறி அழுத போதிலும் விடாமால் கொடுமை செய்துள்ளான் ரிஷ்வந்த். பணம் வசதி உள்ளதால் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று தோழிகளாகப் பழகிய பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார்கள்
சபரிஷ் , திருநாவுக்கரசு, பார் நாகராஜன் கும்பல். இவர்களிடம் விசாரித்தால் இன்னும் பல தகவல் வெளியாகும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பொள்ளாச்சியில் பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்புணர்வு செய்த கொடூரர்கள் எல்லோரையும் கைது செய்ய வலியுறுத்தி மாதர்சங்கம் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த நாகராஜை அக்கட்சியிலிருந்து தலைமை நீக்கி உத்தவிட்டுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான .எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சிக்கு அவப்பெயரும் கலங்கமும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும்,கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் ஏ.நாகராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி இன்று மாலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இளம் பெண்ணை விடியோ எடுத்து பெண்ணையும் அவர் குடும்பத்தையும் மிரட்டியதாக அப்பெண் புகார் கொடுத்ததை அடுத்து நாகராஜ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் போலீஸார் துணை சபாநாயகர் ஜெயராமன் மகன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் தகவ வெளியானது. தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆடியோ விவகாரத்தில் தற்பொழுது அதிமுக கட்சியைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.



No comments:
Post a Comment