காதல் என்று நாடகமாடும்
எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது என்று பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம்
குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி
பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன், பேஸ்புக் மூலம் பேசி, பழகி, ஆபாச படம்
எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு என்னும் வாலிபன் உள்ளிட்ட 7 பேர் மீது
வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களில்
சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார் உட்பட 7 பேர் முதலில் கைது
செய்யப்பட்டனர். பின்னர் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி
திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த
வழக்கில் ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு
தொடபிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் காதல்
என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது என்று பொள்ளாச்சி
பாலியல் கொடூர சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பொள்ளாச்சி
பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி
அளிக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது.
இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க
காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பொள்ளாச்சி பாலியல்
வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள்
என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல்
என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி
வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment