பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை முதலில் வெளியுலகிற்கு
எடுத்துரைத்ததே நான்தான் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் துணை
சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக) இன்று மாலை நிருபர்களுக்கு
பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொள்ளாச்சி பலாத்கார
காட்சி தொடர்பாக முதலில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்து நான்.
நான்தான் இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி இந்த சம்பவத்தை
வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததேன்.
ஆனால் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் இதில் என்னை தொடர்புபடுத்தி மோசடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எங்களைப் பொறுத்த அளவில் இந்த கொடுஞ்செயலில் யார்
ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை
ஆணித்தரமாக, கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அதிமுக
எதுவும் செய்யவில்லை. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முதன்
முதலில் வெளிப்படுத்தியதும் வேண்டுகோள் விடுத்தும் நான் தான்.
நான்
சொல்லிய பிறகுதான் மக்களுக்கு இந்த சம்பவம் குறித்து தெரியும். கடந்த 27ஆம்
தேதி இது தொடர்பாக நான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து உள்ளேன்.
இன்று தேதி 11 ஆகிறது. எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்பதை நீங்களே
புரிந்துகொள்ளலாம்.
என் மீது சமூக வலைதளங்களில் அவதூறு
பரப்பப்படுகிறது. இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு
பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
source: oneindia.com

No comments:
Post a Comment