
திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளன என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட
உள்ளது என்பது குறித்து தகவல் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில்
இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்
தலைவர் தொல்.திருமாவளவன் நடுவே இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி
உள்ளது.
அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த தொகுதியில் போட்டியிட
போட்டியிடுகிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபற்றி
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
விடுதலை சிறுத்தைகளுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து
திருமாவளவனிடம் நிருபர்கள் கேட்டபோது, எந்தெந்த தொகுதிகள் என்ற பங்கீடு
பேச்சுவார்த்தை நடைபெற்றது உண்மைதான். தொகுதி பெயர்களை திமுக தலைவர்
ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.

No comments:
Post a Comment