முதல்வர் ஜெயலலிதா 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் உழைத்ததால்தான்
உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில்
சம்பத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் அஜீரண கோளாறு ஏற்பட்டதாக
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில் நுரையீரலில் நீர் கோர்த்ததால் ஜெயலலிதாவுக்கு மூச்சு
திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனிடையே அதிமுக செய்தித் தொடர்பாளர்
நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் உழைக்கிறார்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பை பெற்றுத்தந்தது, மெட்ரோ
ரயில், ஏழை மாணவர்களுக்கான நலத்திட்ட உதவி என 2 நாட்களாக வேலைப்பளு அதிகம்.
நேற்று இரவு 7மணிக்கு கூட உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார யுக்திகள்
குறித்து ஆலோசித்தார். நல்ல நிலையில்தான் பேசினார். விசையறு பந்து, நசையறு
மனமும் உடையவர் மீண்டு வருவார் என்றார்.
அதிமுகவின் மற்றொரு செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதியோ, ஜெயலலிதாவுக்கு
அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும். அவருக்கு எதிர்ப்பு சக்தி குறைவு.
மற்றபடி எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment