முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து மூச்சு திணறல்
ஏற்பட்டதாலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு திடீரென அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறால் ஜெயலலிதாவுக்கு
உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் நுரையீரலில் நீர் கோர்த்து மூச்சு திணறல் ஏற்பட்டதாலேயே
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது
நுரையீரலில் இருந்து நீர் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா நலமுடன்
இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்று முழுவதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையில்
ஜெயலலிதா இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


No comments:
Post a Comment