சாலைப் போக்குவரத்து இரைச்சலால் வண்டி ஓட்டுபவர்களுக்கும், அருகில் குடியிருப்பவர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 2014 மற்றும் 2015ம்
ஆண்டுகளில் ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்தவர்கள் குறித்து இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில், போக்குவரத்து இரைச்சலுக்கும், ஹார்ட் அட்டாக்கிற்கும் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதயத்திற்கு ஆபத்து... இதன்மூலம் போக்குவரத்தால் ஏற்படும் இரைச்சல்களினால் காற்று மாசுபாடு, மனிதர்களின் காதுகள் கேட்கும் திறனை இழக்கும் அபாயம் மட்டுமின்றி, இதயத்திற்கும் பாதிப்பு என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பான பயணம்... ஆனால், இந்த அபாயம் ரயில் மற்றும் விமானப் பயணிகளுக்கு ஏற்படுவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே இத்தகைய பயணங்கள் இதயத்திற்கு நல்லது என்பது அவர்களின் கருத்து.
சாலைப் பகுதி குடியிருப்புகள்... போக்குவரத்து நெரிசலின் போது வாகனங்கள் ஏற்படுத்தும் ஒலியால் பாதிப்படைவர்கள் சாலைகளில் பயணம் செய்பவர்கள் மட்டுமல்ல, அத்தகைய பகுதிகளின் அருகில் குடியிருப்பவர்களும் தான் என்கிறது இந்த ஆய்வு.
அறிவுரை... இதனால் மன அமைதியுடன் வாழ நினைப்பவர்கள் சாலைகளுக்கு மிக அருகில் வசிக்காமல், சற்று தள்ளி வசிப்பது நலம் என்பது ஆய்வாளர்களின் அறிவுரை.



No comments:
Post a Comment