கட்சிக்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருப்பதாலும், திமுக, அதிமுகவுடன் மோதி வெல்லக் கூடிய வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக புறக்கணிக்கலாம் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை தமிழக அரசியல் களத்தை தனது வாக்கு வங்கியால் மிரட்டி வந்த கட்சி தேமுதிக. ஆனால் சட்டசபைத் தேர்தல் அக்கட்சியை தடம் இல்லாமல் போகச் செய்து விட்டது. இதனால் முடங்கிப் போயுள்ளது தேமுதிக.
அக்கட்சியிலிருந்து பல முக்கியத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் விலகிப் போய் விட்டனர். திமுக, அதிமுக என மாறி மாறி சேர்ந்து வருகிறார்கள்.
பிரேமலதா - சுதீஷ் கட்சியின் மகா மோசமான தோல்விக்கு பிரேமலதாவும், சுதீஷும்தான் காரணம் என்பது பெரும்பான்மையான தேமுதிகவினரின் எண்ணமாகும். இதை விஜயகாந்த்தைச் சந்தித்த கட்சி நிர்வாகிகளும் கூறி விட்டனர்.
மக்கள் நலக் கூட்டணி பிரேமலதாவால்தான் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்து மோசம் போய் விட்டதாக கட்சியினர் கருதுகின்றனர். இந்த நிலையில் மீண்டும் கூட்டணியைத் தொடர மக்கள் நலக் கூட்டணி ஆர்வமாக உள்ளது. ஆனால் தேமுதிகவினர் அதற்குத் தயாராக இல்லை.
யார் செலவு செய்வது? இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் தேமுதிகவினர் மத்தியில் ஆதரவு இல்லை. போட்டியிட்டால் செலவையும் நாம்தான் பார்த்தாக வேண்டும். போட்டியிட்டு அவமானப்படுவதை விட பேசாமல் போட்டியிடாமல் இருக்கலாம் என்று தேமுதிகவினர் கருதுகின்றனராம்.
மனச்சோர்வு மேலும் தேர்தல் என்றாலே தேமுதிகவினர் மத்தியில் ஒரு விதமான அலர்ஜியும் வந்து விட்டது. மனச்சோர்வில் அவர்கள் உள்ளனர். போட்டியிட்டாலும் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
கட்சி கரைகிறது மறுபக்கம் கட்சி தொடர்ந்து உடைந்து வருகிறது. பலரும் வெளியேறிய வண்ணம் உள்ளனர். இதனால் கட்சித் தலைவர் விஜயகாந்த், கட்சியைக் காக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டுள்ளார்.
புறக்கணிக்கலாம் இந்த நிலையில் பேசாமல் தேர்தலைப் புறக்கணித்து விடலாம் என்ற மன நிலைக்கு விஜயகாந்த் வந்திருப்பதாக கூறுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடும் வாய்ப்புகள் குறைவு என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.


No comments:
Post a Comment