போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் காவலர்களை மீண்டும் போலீஸ் பணிக்கு அனுப்ப டிஜிபி அசோக் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஏராளமான போலீஸார் தற்போது வீட்டு வேலை செய்து வருகின்றனர். காவலர்களான அவர்கள் வேலைக்காரர்கள் ரேஞ்சுக்கு நடத்தப்படுகின்றனர். காய்கறி வாங்குவது, நாயைக் குளிப்பாட்டுவது, தோட்டை வேலை பார்ப்பது, துணி துவைப்பது என்று பல வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றச் செயல்களைத் தடுக்க ஆள் இல்லை சென்னையில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றனர். போதிய அளவில் போலீஸார் இல்லாததால் இவர்களைத் தடுப்பதிலும், பிடிப்பதிலும் பெரும் தாமதம் ஏற்படுகிறது.
டிஜிபி ஆலோசனை சில நாட்களுக்கு முன்பு டிஜிபி அசோக்குமார் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவை சந்தித்து தமிழகத்தில் தொடர்ந்து
நடந்து வரும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும், குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
காலியிடங்களை நிரப்பக் கோரிக்கை இந்த ஆலோசனையின்போது சென்னை மாநகரத்திற்கு தேவையான காவலர்களை நியமிக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள 25,000 காவலர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது
700 பேரை திரும்ப அனுப்ப உத்தரவு மேலும் சென்னையில் வசித்து வரும் ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் தற்போது சென்னையில் உள்ள போலீசார் எண்ணிக்கையில் 3 சதவீதம், அதாவது 700க்கும் மேற்பட்ட காவலர்கள், அதிகாரிகள் வீடுகளில் துணித்துவைக்கவும், வீட்டை துடைக்கவும் ஈடுபடுத்தி வருகின்றனர்.
டிஜிபி அசோக்குமார் சென்னையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்யும் காவலர்களை நியமித்தால் போதுமானதாக இருக்கும். இதையடுத்து ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் வீட்டு வேலை செய்யும் காவலர்களை திரும்ப பெற வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனுக்கு டிஜிபி.அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார். டிஜிபியின் இந்த உத்தரவால் வேலைக்காரர்கள் போல நடத்தப்பட்டு வரும் 700 போலீஸாருக்கு "விடுதலை" கிடைத்துள்ளது.


No comments:
Post a Comment