தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழையின் தாக்கம், இரண்டு மடங்காக அதிகரித்ததால், நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் உள்ள, 89 அணைகள், தங்களின் முழு கொள்ளளவில், 90 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 27-ம் தேதி முதல் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்குப்பருவமழையால் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் தங்களின் முழு கொள்ளளவில், 90 சதவீதத்தை எட்டியுள்ளதால், அணைகளில் மட்டும், 210.10 டி.எம்.சி., தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 89 அணைகளில், அவற்றின் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், 238.58 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை, 68 செ.மீ.அளவை தாண்டி விட்டது.
வடகிழக்கு பருவமழை, டிசம்பர் கடைசி வாரம் வரை தொடரும் என்பதால், தமிழகத்தின் ஆண்டு மழை, சில ஆண்டுகளின் அளவை தாண்டி, தென்மேற்கு, வடகிழக்கு இரண்டு பருவமழையின் அளவையும் சேர்த்து, 100 செ.மீ., அளவை எட்ட வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, வருவாய்த் துறை கணக்கின்படி, 16,57,676 ஹெக்டேர் நஞ்சை நிலங்களிலும்; 67,89,080 ஹெக்டேர் புஞ்சை நிலங்களிலும், நடப்பாண்டில் விவசாய பணிகள் நடக்கும் என, தெரிகிறது.
இதன் மூலம் சில ஆண்டுகளாக, 100 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டாத தமிழகத்தின் உணவு உற்பத்தி, 150 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டும் என, விவசாயத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
வங்கக்கடல் மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில், வரும், 27ம் தேதி முதல், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்,குமரிக்கடல் பகுதியில் நிலவிய, காற்று மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவுகள் அருகே நிலை கொண்டுள்ளது. அதனால், 22ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.
அதிகபட்சமாக, திருவாரூர் - 6; நாகை - 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இந்த காற்று மேலடுக்கு சுழற்சி, தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தின் தெற்கு மற்றும் வட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், மழைக்கு வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மேலும் மூன்று தினங்களுக்கு மழையோ இடியுடன் கூடிய மழையோ நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்னும் வலுபெறவில்லை. இது அந்தமான் கடலிலிருந்து தென் கிழக்கு வங்கக் கடல் வரை படர்ந்துள்ளது.
இது மேலும் நகர்ந்து மேற்கு வங்கக் கடலை அடைந்த பிறகு, வரும் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில், இயல்பு அளவாக, தமிழகத்ததிற்கு, 44 செ.மீ., மழை கிடைக்கும். இதுவரை, 35 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப்பருவமழையால் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் தங்களின் முழு கொள்ளளவில், 90 சதவீதத்தை எட்டியுள்ளதால், அணைகளில் மட்டும், 210.10 டி.எம்.சி., தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 89 அணைகளில், அவற்றின் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், 238.58 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment