வரலாற்றைப் பற்றி குஜராத் முதல்வரும் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கடுமையாக தப்பும் தவறுமாக பேசி வருவது வழக்கமாகியுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் நிறுவனரின் பெயரை சுதந்திரப்போராட்ட வீரர் ஒருவரின் பெயருடன் போட்டுக் குழப்பி சொதப்பியெடுத்தது மீண்டும் ஒரு வரலாற்று உளறலாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நேற்றுய் கேதாவில் மருத்துவமனை திறப்பு விழா ஒன்றில் பேசிய நரேந்திர மோடி ஸ்யாம பிரசாத் முகர்ஜி என்பவரை “குஜராத்தின் கர்வமிக்க மகன்” என்று வர்ணித்துள்ளார். மேலும் லண்டனில் இந்தியா ஹவுசை நிறுவியவரும் இவரே என்றும், இந்திய புரட்சியாளர்களின் குரு என்றும் இவர் 1930ஆம் ஆண்டு இறந்தார் என்றும் இவர் சாகும் தறுவாயில் தனது சாம்பலை பத்திரமாக வைத்து சுதந்திர இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறியதாகவும் மோடி உளறிக்கொட்டியுள்ளார்.
குஜராத்தின் கர்வமிக்க மகன் என்று மோடியால் தப்பும் தவறுமாக வர்ணிக்கப்பட்ட ஸியாம பிரசாத் முகர்ஜி உண்மையில் கொல்கட்டாவில் பிறந்தவர். இவர் 1953ஆம் ஆண்டு மரணமடைந்தார் மோடி குறிப்பிட்டது போல் 1930ஆம் ஆண்டு அல்ல. மேலும் இவர் இந்தியாவில்தான் மரணமடைந்தார் இவரது உடல் மேற்குன்வங்கத்திலேயே தகனம் செய்யப்பட்டது. மோடி குறிப்பிட்டதுபோல் லண்டனில் சாகவும் இல்லை தனது சாம்பலை சுதந்திர இந்தியாவிடம் ஒப்படைக்க அவர் கூறவுமில்லை.
உண்மையில் மோடி குறிப்பிட வேண்டிய நபர் ஸ்யாமாஜி க்ரிஷ்ன வர்மா என்பவரே. இவர்தான் குஜராத்தில் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு 1857; பிறந்த ஊர் மாண்டவி. இவர் ஒரு சமஸ்கிருத மொழிப் பண்டிதர். காஸியைச் சேர்ந்த பண்டிட்கள் சேர்ந்து 1877ஆம் ஆண்டு இவருக்கு ‘பண்டிதர்’ என்ற பட்டத்தை வழங்கினர். முதன் முதலாக ஒரு பிராமணரல்லாதார் ஒருவர் பண்டிதர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்தான் லண்டனில் இந்தியா ஹவுஸை நிறுவியவர்.
இவரே சவர்கர், பீகாஜி காமா, விரேந்திரநாத் சட்டோபாத்யாய் போன்ற புரட்சியாளர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர். இந்த வர்மாவின் சாம்பலைத்தான் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்திலிருந்து கொண்டு வந்தார் என்று குஜராத் மாநில சுற்றுலாத்துறை இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் மோடி குறிப்பிட்ட டாக்டர் ஸ்யாம பிரசாத் முகர்ஜி ஜவகர்லால் நேரு அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனசங் என்பதை 1951ஆம் ஆண்டு நிறுவினார். இவர் ஜம்மு காஷ்மீரில் இந்தியர்கள் நுழைய விதிக்கபட்டிருந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து போராடி 1953ஆம் ஆண்டு சிறைக்கு சென்றார். இவர் சிறையில் மரணமடைந்தார். இவரைத்தான் பாஜக மாவீரன் என்று புகழாரம் சூட்டிவைத்துள்ளது.
ஆனால் நேற்று உதவியாளர் சீட்டு கொடுத்தபின்பு தனது தவறை மோடி திருத்திக் கொண்டார் என்று பாஜக கூறுகிறது. இது வீடியோ டேப்பிலும் பதிவாகியுள்ளது.
இனிமேலாவது மோடி உளறுவதை நிறுத்துவாரா? அல்லது தொடருமா என்பதை பொறுத்திருதே பார்க்கவேண்டும்.
நன்றி http://indru.todayindia.info/

No comments:
Post a Comment