இலங்கையில் மேல் மாகாணம் முழுவதும் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார் . இதில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 7 நாட்கள் முழுவதுமான நாட்டை மூடிவிடுவதற்கு நேற்று முன் தினம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் , ஊரடங்கு சட்டம் அமல்படுத்தினால் நாட்டின் சாதாரண பொது மக்கள் முகம் கொடுக்கும் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் தீவிரமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தினசரி ஊதியத்தில், சிறிய வர்த்தகங்கள் மூலம் வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு இந்த முறையில் ஊரடங்கு அமல்படுத்தினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார் .

No comments:
Post a Comment