தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு வழக்கமாக ஜூலை மாதம் நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா காரணமாக தாமதமாக நவம்பரில் நடக்கவிருக்கிறது. இன்று
வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில், மருத்துவப் படிப்புக்கு இன்று முதல் 12ம்
தேதி வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று
கூறப்பட்டுள்ளது.
மருத்துவக் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அதன்பின்னர் ஓரிரு நாளில் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே கலந்தாய்வை வேறு இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு எங்கு நடைபெறும்? எப்பொழுது நடைபெறும் என்ற தகவல்கள் tnmedicalselection.net இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment