
கோவையில் நடைபெற்று வரும் கால்பந்து தொடரில் கோவை, திருச்சி, தஞ்சாவூர்,
போத்தனூர், சென்னை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகள்
கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டிணம் வெஸ்டர்ன் FC அணியினரும் கலந்து கொண்டு விளையாடினர்
இன்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்டர்ன் FC VS YFFC
போத்தனூர் அணியினரும் மோதினர். இதில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில்
விளையாடி முடித்தனர். இரவு 8 மணியளவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில்
வெஸ்டர்ன் FC VS பாலக்காடு அணியினரோடு விளையாடி 2-0 என்ற கோல் கணக்கில்
விளையாடி காலிறுதி சுற்றுக்கு வெஸ்டர்ன் FC முன்னேறியுள்ளனர்.
No comments:
Post a Comment