
டெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட போலீஸ்
அதிகாரி தாவிந்தர் சிங் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார் என்பதை
கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பிரியங்கா காந்தி
டிவிட் செய்துள்ளார்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை
சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் ஷோபியன்
அருகே போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கைது
செய்யப்பட்டனர். இவர்களை காரில் அழைத்து சென்ற ஶ்ரீநகர் விமான நிலைய
டிஎஸ்பி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.
இவருடன்
போலீசால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி நவீத் பாபு, இர்பான்,
ரஃபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் டெல்லியில் மாபெரும் நாசகார வேலைகளுக்கு திட்டம்
போட்டு இருந்ததாக தகவல்கள் வருகிறது. போலீசார் இவரை தீவிரமாக விசாரித்து
வருகிறார்கள் .
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த
நிலையில் தாவிந்தர் சிங் குறித்து காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பிரியங்கா
காந்தி டிவிட் செய்துள்ளார். அதில், தாவிந்தர் சிங் கைது சந்தேகம்
தருகிறது. இது பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தியா பாதுகாப்பு குறித்து பல
கேள்விகள் இதனால் தோன்றுகிறது.
அவரை இத்தனை நாளை நாள்
கண்டுபிடிக்காமல் இருந்தது எப்படி என்பது சந்தேகம் தருகிறது. அதோடு அவரை
நம்பி மிக முக்கிய பொறுப்புகளை அளித்துள்ளனர். வெளிநாட்டு தூதர்களை
கவனித்துக் கொள்ளும் பணிகள் உட்பட முக்கிய பணிகளை கூட அவரிடம்
அளித்துள்ளனர்.
அவர் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார். இது
தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்
மேற்கொள்ள உதவி செய்வது மிகப்பெரிய துரோகம் ஆகும், என்று பிரியங்கா காந்தி
டிவிட் செய்துள்ளார்.
No comments:
Post a Comment