குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு
பகுதிகளில் ஒருமாதத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அரசிதழில் கடந்த
10ம் தேதி வெளியிட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்குத் தொடக்கம் முதலே கேரள
அரசு எதிர்ப்பைப் பதிவு செய்துவந்தது.

இதையடுத்து,
சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையின்
சிறப்புக் கூட்டத் தொடரில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் கேரளா
வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இதன்மூலம் குடியுரிமை திருத்தச்
சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற முதல் மாநிலம் என்ற பெயரையும்
கேரளா பெற்றது. கேரள அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட சுமார் 60
மனுக்களை உச்ச நீதிமன்றம் வரும் 22ம் தேதி விசாரிக்க இருக்கிறது.
இந்தநிலையில்,
சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது தொடர்பாக கேரள
அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸிடம் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான்
விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு பணித்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த 14ம்
தேதி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது குறித்து
பேசியிருந்த ஆளுநர் ஆரிஃப், ஆளுநரின் அனுமதியின்றி ஒரு மாநில அரசு உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி இருக்கிறதா என்பது குறித்து
விசாரிப்பதாகக் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.
மேலும்,
``நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து மாநில அரசு உச்ச
நீதிமன்றம் சென்றுள்ளதை அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின்
தலைவர், இதுகுறித்த செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளக் கூடிய சூழல்
இருக்கிறது'' என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில்
திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது
கான், ``அரசியலமைப்புச் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். இது தனிப்பட்ட
சண்டை அல்ல. இந்த விவகாரத்தில் அமைதியாக நான் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்க மாட்டேன். சட்டம் சரியாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பதை
நான் உறுதி செய்வேன்'' என்றார்.

No comments:
Post a Comment