டெல்லி: உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏதாவது ஒரு பல்கலைக்கு சென்று
அங்கு இருக்கும் மாணவர்களை சந்தியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்
காந்தி சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில்
டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த
தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். குடியுரிமை சட்ட
திருத்தம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது இதில் ஆலோசனை
செய்தனர்.
இந்த ஆலோசனைக்கு பின்
செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து பேசினார்.
அதில், பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் ஏதாவது ஒரு பல்கலைக்கு சென்று
அங்கு இருக்கும் மாணவர்களை சந்திக்கட்டும்.
அங்கிருக்கும் மாணவர்கள் உடன் அவர் பேசட்டும்.
இளைஞர்கள்
வேலையின்றி தவிர்க்கிறார்கள். மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். பொருளாதாரம்
நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஆனால் இதை பற்றி எல்லாம் பிரதமர் மோடி
கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இளைஞர்களின் குரலை மத்திய அரசு
மதிக்கவில்லை.
இவர்களுக்கு எல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும். அவர்
போய் மாணவர்களை சந்தித்து பேசட்டும்.இந்தியாவின் இந்த நிலைக்கு அவர்கள்
பதில் சொல்லட்டும், என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி
எழுப்பி உள்ளார்.
source: oneindia.com

No comments:
Post a Comment