வாணியம்பாடி: வாலைவிட்டு ஆழம்
பார்ப்பதை விட்டு கொள்கையைத் தெளிவு படுத்தவேண்டும் என்று திமுக பொருளாளர் :
துரைமுருகனைச் சீண்டும் விதமாக தமிழக காங்கிரஸின் சிறுபான்மையினர் பிரிவு
கருத் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்.
சிறுபான்மைதுறை தலைவர் அஸ்லம்பாஷா அலுவலகத்தில் இருந்து வியாழனன்று
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒருமுறை
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அதிகாரம் என்பது எங்களுக்கு மேலே போடும்
துண்டு. கொள்கை என்பது எங்களுக்கு இடையில் கட்டும் வேட்டி. கொள்கை என்பது
எங்களுக்கு மானம். ஆட்சி என்பது மேலே போடும் துண்டு.
ஆட்சிக்காக மானத்தை இழக்க மாட்டோம் என்றார். பேரறிஞர்
அவர் வழி வந்த தம்பிகளை கொள்கை முடிவெடுக்க கூட்டத்திற்கு அழைத்தால்
கூட்டணி நியாயம் பேசுவது நியாயமா.?
அதே நேரம் அண்ணன் எப்போ
இடம் பெயர்வார்? திண்ணை எப்போ காலியாகும் என காந்துக்கிடந்தவர் போல்
பேசுவது எந்த வகை அறம்? ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு வாடி நிற்குமாம்
கொக்கு என்பது போல் எதற்கோ காத்துக்கொண்டிருக்கிறதா? வேட்டியை இழக்கத்
தயாரானது போல் உளறுவது, அறம் ஒழுகும் தமிழ் மரபல்ல.அறிவிக்கப்படாத
நெருக்கடி நிலையில் நாடு சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும்போது, அரசியல்
சாசன அடிப்படை விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படும் போது, நீங்கள்
எந்தப்பக்கம் நின்றீர்கள் என்பதே வரலாறாகப் பதிவாகும். சனாதன பாசிசம்
ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் மீதி கட்டவிழ்த்து விடப்பட்ட போது நீங்கள்
எந்தப்பக்கம் நின்றீர்கள்? அடுக்கடுக்காகக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை
அமல்படுத்திய போது சமுகநீதி காக்க வந்த கட்சி எந்தப்பக்கம் நின்றது?
குடியுரிமைச்
சட்டம் மூலம் சொந்த நாட்டு மக்களை அகதிகள் முகாமில் அடைத்தபோது நீங்கள்
எந்தப்பக்கம் நின்றீர்கள்? கொண்ட கொள்கைக்காக உயிரையும் இழப்போம் என்று
கூறிய போரறிஞர் அண்ணா பக்கம் நாங்கள் இருக்கிறோம். அண்ணாவின் தம்பிகளான
நீங்கள் எந்தப்பக்கம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கூட்டணியில் உள்ள
குளறுபடிகளை முன்னிருத்தி கொள்கையை இழப்பதாக இருந்தால் உங்கள் நோக்கம்
சந்தேகத்திற்குரியதே.
ஆகவே வாலைவிட்டு ஆழம் பார்ப்பதை விட்டு கொள்கை என்ன என்பதை தலைமை தெளிவு படுத்தவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment