திருவனந்தபுரம்: கேரளாவில் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு அடிப்படியாக
இருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எதுவும் செய்யப்படாது
என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. கேரளாவில் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த
சிஏஏ சட்டத்தை கேரளா அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. முதலில்
சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மாநிலம் கேரளாதான் என்பது
குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிஏஏவை அமல்படுத்த மாட்டோம் என்றும் கேரள மாநில
அரசு குறிப்பிட்டுள்ளது.
என்ன
அடிப்படை என்ன
அடிப்படை என்ன
இந்த என்ஆர்சி, சிஏஏ மொத்த செயல்பாட்டிற்கும் அடிப்படை மக்கள் தொகை கணக்கெடுப்புதான்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை, என்பிஆர் என்று கூறுவார்கள்.
அதாவது தேசிய மக்கள் தொகை பதிவேடு. மத்திய அரசின் இந்த பதிவேட்டை, மாநில
அரசுதான் உருவாக்கும்.
முக்கியம்
எப்படி முக்கியம்
எப்படி முக்கியம்
மாநில
அரசின் அறிவிப்பின் பெயரில், மாநில அரசு அதிகாரிகள்தான் இந்த கணக்கெடுப்பை
எடுப்பார்கள். இந்த பதிவேடு புதுப்பிக்கப்பட்டால்தான் குடி உரிமை சட்ட
திருத்தம் , என்ஆர்சி என்று எதுவாக இருந்தாலும் செயல்படுத்த முடியும்.
அதாவது என்ஆர்சி, குடியுரிமை சட்டம் இரண்டுக்கும் பிள்ளையார் சுழியே இந்த
மக்கள் தொகை பதிவேடுதான்
தடை
தடை அறிவிப்பு
தடை அறிவிப்பு
தற்போது
என்பிஆர் பணிகளை தடை செய்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார். தங்கள் மாநிலத்தில் என்ஆசி, குடியுரிமை சட்ட திருத்தம்
இரண்டும் கொண்டு வரப்படாது என்று கூறியவர், இதற்கு அடிப்படையாக விளங்கும்
தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளுக்கு தடை விதித்துள்ளார்.
பணிகள்
பணிகள் இல்லை
பணிகள் இல்லை
அதோடு
என்பிஆர் பணிகளை எக்காரணம் கொண்டும் செய்ய கூடாது. இது தொடர்பாக மாவட்ட
ஆட்சியாளர்கள் எந்த விதமான பணியையும் மேற்கொள்ள கூடாது. அப்படி செய்தால்
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பினராயி விஜயன்
மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
source: oneindia.com

No comments:
Post a Comment