
சங்கரன்கோவில் மலையான் குளம் கிராமம்
ஜெருசேலம் தர்மம் நகரை சேர்ந்த தங்கதுரை என்பவர் தனது நண்பர் ராமகிருஷ்ணன்
என்பவருடன் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி புளியங்குடி ரோட்டில்
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ரோந்து பணியில்
இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன், காவலர்கள் டேவிட்ராஜ்,
செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் பைக்கை வழிமறித்து சோதனையிட்டு, மது
குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீஸ்
நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, போலீசாரை தாக்கியதாக
தங்கத்துரை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இன்ஸ்பெக்டர்
மற்றும் போலீசார் தன்னை தாக்கியதாக படுகாயத்துடன் தங்கத்துரை
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, புகாரின் மீது தகுந்த முகாந்திரம் இருப்பின்
சங்கரன்கோவில் டவுண் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் மீது
வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment