
புதுடில்லி: வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஓமர் அப்துல்லா தாடியுடன்
உள்ள படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட்
மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை
நீக்கி ரத்து செய்தது.மேலும் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு
யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய
அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான
ஓமர் அப்துல்லா ஒருவர். ஸ்ரீ நகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அவரை சந்தித்து வருகின்றனர்.
சிறை வைக்கப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில் வரும்
மார்ச் மாதத்தில் தன்னுடைய 50 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
இந்நிலையில் அவரின் தற்போதைய புகைப்படங்கள் டுவிட்டர் இணையத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. அதில் நீண்ட தாடியுன் தலையில் குல்லா அணிந்தவாறு
சிரித்த முகத்துடன் காணப்படுகிறார். இது குறித்து அவருடைய குடும்ப
உறுப்பினர் கூறுகையில் அவர் வீட்டு சிறையில் இருந்து வெளி வரும் வரையில்
தாடியை எடுக்க மாட்டார் என கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட 29 நாளில்
இருந்து தாடியை எடுக்க மறுத்து விட்டார். அவர் தினந்தோறும் கடுமையான
உடற்பயிற்சியை செய்துவருவதாகவும் கூறினர். டுவிட்டரில், வெளியான ஒமர்
அப்துல்லாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
No comments:
Post a Comment