
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்
மாவட்டம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்ததால் அங்கு
பதற்றம் ஏற்பட்டுள்ளது. துக்ளக் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் நடத்திய
1971ம் ஆண்டு சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலம் குறித்து
ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையானது. ரஜினிக்கு எதிராக பல்வேறு
அமைப்பினர், அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளில் ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
ரஜினியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நீடித்து வருகிறதது.
ரஜினிகாந்தின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தில்
ரஜினிகாந்துக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த நிலையில் உத்திரமேரூர் அருகே பெரியார் சிலை
உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரமேரூரை அடுத்த
சாலவாக்கம், களியப்பட்டியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று இரவு வந்த மர்ம
கும்பல் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்று விட்டனர். இன்று காலை
பெரியார் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சாலவாக்கம் போலீசில் புகார்
அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்
மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போராட்டம் நடைபெறாமல் இருக்க
அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 1988ம்
ஆண்டு கலி. பூங்குன்றன் இந்த பெரியார் சிலையை திறந்து வைத்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment