
நெல்லை மாவட்ட நிர்வாகம் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் நெல்லை புத்தகத் திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லை
மாவட்ட நிர்வாகம் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் மற்றும் தென்னிந்திய
புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து பொது மக்களின்
வாசிப்புத் திறன் மற்றும் அறிவுசார் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில்
"நெல்லை புத்தகத் திருவிழா 2020" வரும் 01.02.2020 முதல் 10.02.2020 வரை
நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
2020-ஆம் ஆண்டு நடைபெறும் நெல்லை புத்தகத் திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
நெல்லை வஉசி மைதானத்தில் இதற்காக மாநகராட்சி சார்பில்
குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பறை வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும்
ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment