புதுடில்லி: சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் பட்டீடா கிராமத்தைச்
சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது . மருத்துவமனைக்கு
செல்ல வாகன வசதி இல்லாத அடர்ந்த காட்டு பகுதி வழியாக செல்ல வேண்டிய நிலை
ஏற்பட்டது. 6 கி.மீ. தூரம் தகவலறிந்த சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய
ரிசர்வ் போலீஸ் படையினர் கர்ப்பிணி பெண்ணை கயிற்று கட்டிலில் வைத்து 6
கி.மீ. தொலைவிற்கு தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன்
வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..முன்னதாக கடந்த
வாரம் காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவிய நிலையில் ஸ்ரீநகரை
சேர்ந்த ஷமீமா என்ற கர்ப்பணியை மருத்துவமனைக்கு அழைத்து முடியாததை அறிந்த
ராணுவ வீரர்கள் 100 பேர் ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி கொண்டு,
பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சுமார் 4 மணி நேரம் நடந்து சென்று
மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ஷமீமாவுக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

No comments:
Post a Comment