- சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரில் வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதல்.
- திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான நிஷா, மல்லிகா, கார் ஓட்டுநர் மற்றும் 3 வயது ஆண் குழந்தை உட்பட காரிலே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சென்னையில்
இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார், உளுந்தூர்பேட்டை அடுத்த
வண்டிப்பாளையத்தில் உள்ள நான்கு வழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி
தடுப்பை சுவரை தாண்டி எதிரில் வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தின்
மீது மோதி பஸ்சுக்கு அடியில் சிக்கிக் கொண்டது.
பின்னர்
கயிறு மூலம் இழுக்கப்பட்டு தனியார் பேருந்து கீழே சாய்க்கப்பட்டது. காரில்
பயணித்த திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான
நிஷா, மல்லிகா, கார் ஓட்டுநர் மற்றும் 3 வயது ஆண் குழந்தை காரிலே நசுங்கி
உயிரிழந்து சடலமாக பல நேர போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்து
மீட்கப்பட்டன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது குழந்தைக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை
நடத்தி வருகிறது.

No comments:
Post a Comment