
உத்தர பிரதேசத்தில் டிசம்பர் 20 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்
பின்னர், பல நகரங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான
போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இது குறித்த செய்தி சேகரிக்க பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமது உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றார்.
அவர்,
"உயிர் மற்றும் சொத்து இழப்புகள் சந்தித்த அனைவருமே ஏழை மக்கள். அரசு
நிர்வாகத்தையோ, கிராமத் தலைவர்களையோ அணுகும் இடத்தில்கூட அவர்கள் இல்லை
என்பது குறிப்பிடத்தக்கது" என்கிறார்.
"முசாஃபர்நகரில்,
முஸ்லிம் குடியிருப்புகளில் பல வீடுகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
வீதிகளிலிருந்த வாகனங்கள் மற்றும் பிற உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன.
இதைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு விஷயத்திற்காக தண்டனை
கொடுக்கும் நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது. மக்களின் வெறுப்புணர்வுகளை
இந்த நாசவேலைகள் தெளிவாக வெளிப்படுத்துகிறது" என்று கூறுகிறார்.
காவல்
துறைவும் தம்மிடம் கடுமையாக நடந்து கொண்டது என்று கூறி அவர்,
"காவல்துறையின் ஆற்றலையும் அதன் வலிமையையும் நான் அறிவேன், ஏனென்றால் எனது
தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலும் நான் கிரைம் ரிப்போர்டிங்
செய்துள்ளேன். காவல்துறையினரின் பிரச்சனைகள் பற்றியும் எனக்கு கவலை
இருக்கிறது. ஆனால், எஸ்.பி. சத்பால் அந்தில் தேவைக்கு அதிகமாக கடுமையான
எதிர்வினைகளைக் காட்டியதாக தோன்றியது" என்கிறார்.
மேலும் அவர்,
"எனது 30 ஆண்டுகால ஊடகப் பணியில் காவல்துறையினரிடமிருந்து இதுபோன்ற
எதிர்வினையை நான் பார்த்ததேயில்லை. கலவரம், தீவிரவாத தாக்குதல்கள், குண்டு
வெடிப்புகள், மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்ற பல தீவிரமான சம்பவங்கள்
குறித்து நாங்கள் செய்திகளை கொடுத்துள்ளோம். ஆனால் எந்த ஒரு காவல்துறை
அதிகாரியும் இதுபோன்று நடந்து கொண்டதில்லை. எங்கள் வீடியோக்களை யாரும்
அழிக்கவில்லை" என்கிறார்.
இது குறித்த கட்டுரையைப் படிக்க:உத்தரப்பிரதேசத்தின் மௌனத்துக்கு காரணம் காவல்துறை மீதான அச்சமா?
No comments:
Post a Comment