Latest News

  

உடைந்த படகில் ஏழு சடலங்கள்: வடகொரியாவிலிருந்து 900 கி.மீ. தூரம் ஜப்பான் கடலுக்கு எப்படி வந்தது? என்ன நடந்தது? அதிகாரிகள் தீவிர விசாரணை

ஜப்பானிய தீவு ஒன்றின் கடற்கரைக்கு அடித்துவந்ததாக சந்தேகிக்கப்படும் வடகொரிய மீன்பிடி படகில் ஏழு பேரின் மோசமாக சிதைந்த நிலையிலான உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதற்கான காரணங்களை ஆராய்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

வட கொரியாவிலிருந்து ஜப்பான் கடல் முழுவதும் 900 கிலோமீட்டர் (560 மைல்) தொலைவில் அமைந்துள்ள சாடோ தீவின் கரைக்கு வந்துசேர்ந்துள்ள இந்த உடைந்த கப்பலில் இந்த மனித சடலங்கள் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த படகு வட கொரியாவிலிருந்து புறப்பட்டதாக சந்தேகித்துள்ள ஜப்பானிய காவல்துறையும் கடலோர காவல்படையினரும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இந்த ஆண்டு இதுவரை, குறைந்தது 156 வட கொரியாவைச்சேர்ந்த படகுகள், மீன்பிடி கப்பல்கள் ஜப்பானிய கடற்கரையில் அடித்துவரப்பட்டன அல்லது ஜப்பானிய கடலில் சிதறிக் கிடந்தன என்று டோக்கியோவிலிருந்து வெளிவரும் யோமியூரி ஷிம்பன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

சில அரசாங்க அதிகாரிகளை திருப்தி செய்வதற்காக பெரிய வகை மீன்களை பிடிக்கும் நோக்கத்தோடு சில வட கொரிய மீனவர்கள் கடலுக்கு வெகுதூரம் பயணம் செய்கிறார்கள் என்று கடல் ஆய்வு நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்டதூரம் பயணிக்கும் வடகொரிய மீனவர்களின் படகுகள் அல்லது கப்பல்கள் அவற்றின் பழைய மற்றும் மோசமாக பொருத்தப்பட்ட எரிபொருள் வெளியேற முடியாதநிலையில் கப்பலின் அல்லது படகின் இயந்திர மற்றும் பிற சிக்கல்களுக்கு ஆளாகின்றன, மேலும் அவை மீட்புப் பணிகளுக்காக அழைப்புவிடுக்கவும் அவர்களிடம் சில வழிகள் உள்ளன. ஆனால் சில சிக்கலான நேரங்களில் அவற்றையும் அவர்களால் பயன்படுத்தமுடியாமல் போவதுண்டு.

சில படகுகள் ஜப்பானிய கரையில் இறந்த குழுவினருடன் அடித்துவரப்படுகின்றன, அவை உள்ளூர் ஊடகங்களால் ''பேய்களின் கப்பல்கள்'' என்று அழைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, வடக்கு ஜப்பானில் ஒரு சிறிய மர படகில் இருந்து மீட்கப்பட்ட 10 வட கொரியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அக்டோபரில், ஜப்பானிய ரோந்து கப்பல் மோதியதைத் தொடர்ந்து மூழ்கிய பின்னர் வட கொரிய மீன்பிடி கப்பலின் 60 உறுப்பினர்கள் ஜப்பான் கடலில் மீட்கப்பட்டனர்.

நேற்று, கண்டெடுக்கப்பட்ட ஏழு சடலங்கள் குறித்து கடலோர காவல்படை அதிகாரி ஏஎப்பியிடம் இன்று கூறியதாவது:

''சாடோ ஜப்பானிய தீவின் கடற்கரையில் சனிக்கிழமை மாலை மீன்பிடி படகில் ஏழு பேரின் மோசமாக சிதைந்த நிலையில் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இந்தப் படகு உடைந்த நிலையில் காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் வட கொரியர்கள் என தெரிகிறது. வட கொரியாவிலிருந்து ஜப்பான் கடல் முழுவதும் 900 கிலோமீட்டர் (560 மைல்) தொலைவில் அமைந்துள்ள சாடோ தீவுக்கு அவர்கள் எப்படி அடித்துவரப்பட்டனர், என்ன நடந்தது என்பது புலனாய்வு விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

இவற்றில் ஐந்து ஆண் சடலங்கள். ஆனால் மீதமுள்ள இரண்டு உடல்கள் மோசமாக சேதமடைந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

முன்னரே இதுபோன்ற வழக்குகள் நிறைய வந்துள்ளன. ஆனால் இந்த கடந்த ஜனவரி தொடங்கி டிசம்பர் 27 வரை அப்படியெதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு முதன்முதலாக டிசம்பர் 28ந்தேதி இந்த தீவில் உடைந்த படகிலிருந்து 7 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

படகின் மேல் அடிக்கப்பட்டுள்ள பலகைகளில் கொரிய எழுத்துக்கள் வர்ணத்தில் பூசப்பட்டிருந்தன, அவை பாதியாக உடைக்கப்பட்டன, படகு எந்த நாட்டைச் சார்ந்தது என்பதைக் காட்ட வேறெதுவும் அதில் காணப்படவில்லை''
இவ்வாறு ஜப்பானின் சாடோ தீவின் கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.