
மதுரை: பல தடைகளை கடந்து எளிமையாய் நடந்தது... மது ஒழிப்புக்கு எதிராக தனி ஒருவராய் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த போராளி நந்தினியின் திருமணம் இன்று எளிமையாய் நடந்து முடிந்தது.
2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து மதுவுக்கு எதிராக போராடி வருபவர் நந்தினி. இதுவரையில் பல போராட்டங்களை தனி ஒருவராய் நடத்தி வந்த இவர் மீது காவல் துறை பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதில், ஒரு வழக்கு கடந்த மாதம் 24ம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது "மது போதை பொருளா இல்லையா? போதை பொருளாய் இருந்தால் அரசு விற்பனை செய்வது குற்றம் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார்".
இதனை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 9ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா. இதனால் கடந்த 5ம் தேதி நந்தினிக்கு திருமணம் நடத்த இருந்த நிகழ்வு தடைபட்டது. ஜாமீன் பெற எவ்வளவு முயற்சித்தும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. நேற்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ஜாமீனில் வெளிவந்த நந்தினி இன்றைய தினம் மிகவும் எளிமையாய் தம் குலதெய்வ கோவிலில் வைத்து குணா ஜோதிபாசுவை திருமணம் செய்துகொண்டார்.

No comments:
Post a Comment