Latest News

10 சதவீத இடஒதுக்கீடு: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆதரவு

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இதனை இப்போது நடைபெறவுள்ள எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்விலேயே கொண்டு வர தீர்மானித்துள்ளது.

இதற்கான திட்ட அறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது.

இந்த திட்ட அறிக்கையில் உள்ள விவரங்கள் குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூட்டினார்.

இந்த கூட்டத்துக்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திமுக, விசிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

காங்கிரஸ்:
இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உ. பலராமன், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர். கே.எஸ். அழகிரி சார்பாக அவர்கள் கூறிய கருத்துகள்:
தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை பெறுவதற்காக நீண்ட, நெடிய போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழகத்தில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டிற்கு நீதிமன்றங்கள் மூலமாக ஆபத்து ஏற்பட்ட போது அதை தடுத்து நிறுத்துவதற்காக போராடியவர் தந்தை பெரியார். இந்த போராட்டத்தின் தன்மையை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் வலியுறுத்தியதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்தத்தின் மூலமாகத் தான் சமூகநீதி தத்துவத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை முதல் திருத்தத்தின் மூலவர் என்று வரலாறு பாராட்டியது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற, இடஒதுக்கீடு பெறாத பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க ஏதுவாக இந்திய அரசமைப்பு சட்டம் திருத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக பிற வகுப்பினருக்கான இடஒதுக்கீடுகள் பாதிக்காதவண்ணம் 25 விழுக்காடு கூடுதல் மருத்துவ பட்டப் படிப்பு இடங்களை உருவாக்கி, பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொது பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரித்திருக்கிறது. இந்தியா முழுவதும் இருக்கிற நிலைமைகளின் அடிப்படையில் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்தது. அரசமைப்பு சட்டத்தின்படி பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் நேராமல், இந்த இடஒதுக்கீட்டின் கீழ் வராத, பொருளாதார ரீதியில் வறுமையில் உள்ள முற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஆதரிப்பது என்ற நிலையை காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.


தமிழகத்தைப் பொறுத்தவரை 69 சதவீத இடஒதுக்கீட்டை நாம் பெற்று வருகிறோம். இதற்கு பல சோதனைகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் போராடி காப்பாற்றி வருகிறோம். 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை.

கடந்த ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் 1928 ஆம் ஆண்டு டாக்டர் பி. சுப்பராயன் அமைச்சரவையில் இடம் பெற்ற திரு. எஸ். முத்தையா முதலியார் மேற்கொண்ட இடஒதுக்கீட்டு முறையிலும், பிறகு சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் முதலமைச்சராக ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் ஆட்சி செய்த போதும் முன்னேறிய வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மண்டல் கமிஷன் குறிப்பிட்ட 52 சதவீத பிற்படுத்தப்பட் வகுப்பினரில் 27 சதவீதத்தினருக்கு தான் தற்போது இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல, முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் எவ்வளவு பேர் என்று கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு அந்த விகிதாச்சார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்கலாம். எந்த காரணத்தை கொண்டும் 10 சதவீதம் என்று பொதுவாக இடஒதுக்கீடு வழங்கக் கூடாது. எண்ணிக்கை அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

எனவே, தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்):
இந்த அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் கீழ்க்கண்ட கருத்துகளை இந்த கூட்டத்தில் பதிவு செய்தனர்.

1. சமூகத்தில் நிலவுகிற பொருளாதார, சாதிய ஏற்றத்தாழ்வுகளை போக்கி சமத்துவ வாழ்வை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய அம்சமாக சமூக நீதி கோட்பாடு கருதப்பட வேண்டும். ஆனால், இச்சமூக நீதி கோட்பாடு பொதுவாக இடஒதுக்கீடு என்ற வகையில் மட்டும் சுருக்கப்பட்டு விடுகிறது. மண்டல் கமிஷன் குறிப்பிட்டுள்ளதைப் போல இடஒதுக்கீடு என்பதோடு நிலமற்றவர்களுக்கு நிலவிநியோகம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றையும் நிறைவேற்றுவதன் மூலமே முழுமையான சமூக நீதியை நிலைநாட்ட இயலும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

2. அமலாக்கப்பட்டு வரும் உலகமய, தாராளமயக் கொள்கைகளின் காரணமாக அரசு வேலை வாய்ப்புகள் சுருங்குவதும், காலியிடங்கள் நிரப்பப்படாமல் நீடிப்பதும், தனியார்மயம் அதிகரிப்பதினாலும் இடஒதுக்கீடு கோட்பாடு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. எனவே, காலியிடங்களை நிரப்புவது, அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமலாக்குவது, பொதுத்துறையை பாதுகாப்பது உள்ளிட்டவை சமூக நீதிக்கான போராட்டத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல மதம் மாறிய தலித் கிறித்துவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்த விரும்புகிறோம்.

3. மருத்துவ கல்வி இடங்களில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமலாக்க மறுப்பது சட்ட விரோதமானதாகும். எனவே, மேற்கண்ட அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை மத்திய அரசு கட்டாயம் அமலாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

4. பொருளாதாரத்தில் நலிந்த இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதமானம் வரை இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை மத்திய அரசு (124-வது சட்டத்திருத்தம்) நிறைவேற்றியது. இச்சட்டத்திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதே நேரத்தில், இதனை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்துக் கட்சிகளோடு கலந்து பேசி கருத்தொற்றுமையோடு நிறைவேற்றுவதற்கு மாறாக அவசர கதியில் அரசியல் ஆதாய நோக்கோடு மத்திய பாஜக அரசு நிறைவேற்றியதை நாடாளுமன்றத்தில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போதே எங்கள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

5. இச்சட்டத்திருத்தத்தையொட்டி தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ. 8 லட்சம் உள்ளிட்ட பொருளாதார வரம்பு என்பது நலிந்தோருக்கான வரம்பாக இருக்க முடியாது. இப்பொருளாதார வரம்பை தமிழகத்தில் குறைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

6. பொருளாதாரத்தில் நலிந்த இதர பிரிவினருக்கு இடஒதுக்கீட்டினை அமலாக்கும் போது ஏற்கனவே தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டு கோட்பாட்டிற்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்.

7. அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16க்கு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை (ளுரதெநஉவ வடி ய அயஒiஅரஅ டிக 10 யீநசஉநவே) இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் இப்பிரிவினருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்ட ரீதியான நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

8. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின் படி ஏறக்குறைய 95 சதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகித மக்கள் மட்டுமே இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை என விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு 10 சதமான இடஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய வேண்டும். அம்மக்கள் தொகை எத்தனை சதமானம் என கணக்கிட்டு அதில் சரிபாதி சதமான அளவு இப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

9. பொதுவாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இதுவரை இல்லை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இதே அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற, இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டு விகிதத்தை கணக்கிட்டு அமலாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

10. தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதமான இடஒதுக்கீட்டிற்கு எவ்வகையிலும் பாதிப்பில்லாமல் கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று மேலே குறிப்பிட்டுள்ள விகிதப்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.