குன்னூா்: மத்தியில் மீண்டும் பாஜக
ஆட்சி வந்தால் தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு அதிபர் ஆட்சி வந்துவிடும் என
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்தார்.
கூட்டணி
கட்சியினருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.
ராசா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பேசுகையில்,
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு அதிபர்
ஆட்சி வந்துவிடும்.
மேலும், அரசியல்
சட்டத்திற்கு ஆபத்து வந்து உள்ளதாகவும் பாசிச ஆட்சியை ஆதரிக்கும் தமிழக
எடப்பாடி ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால்
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை காப்பாற்றப்படும் என தெரிவித்தார்.

No comments:
Post a Comment