மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து வரும் வன்முறை
சம்பவங்களைத் தொடர்ந்து அம்மாநில போலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கை
காரணமாக போலி துப்பாக்கி தயாரித்து வந்த தொழிற்சாலை ஞாயிற்றுக்கிழமை
கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத்
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,
கொல்கத்தாவை அடுத்துள்ள சோட்டோ கண்டி என்ற கிராமத்தில் ராஜாரத் பகுதியில்
செயல்பட்டு வந்த இந்த துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து துப்பாக்கி,
தோட்டாக்கள் உட்பட அதை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்
உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt.

No comments:
Post a Comment