
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் போட்டியிடும்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் லோக்சபா தேர்தலில் எந்த
தொகுதியில் போட்டியிடும் என்று தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
திமுக போட்டியிடும் 20 தொகுதிகள், மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும்
தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில்
போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம்
தொகுதியை திமுக அளித்து இருக்கிறது.
தற்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன்
இதுகுறித்து அறிவித்துள்ளார்.
அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில்
நவாஸ் கனி போட்டியிடுகிறார். நவாஸ் கனி எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின்
தலைவராக உள்ளார்.
இவர் ஏணி சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். இவர் கடந்த ஒரு மாதமாக அங்கு
தேர்தல் பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக
கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் இவர்தான் என்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment