Latest News

லோக்சபா தேர்தல்.. அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் இழுபறி.. உத்தேச பட்டியல் இதுதான்







ADMK is going to announce candidate list?

லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவுள்ள நிலையில் இவர்களெல்லாம் போட்டியிடலாம் என உத்தேசமாக தெரிகிறது. லோக்சபா தேர்தலுக்கு 33 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் படு பிஸியாக இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக- பாமக- பாஜக- தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓராயிரம் பிரச்சினைகள்.. மோதல்கள்.. ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் திமுக - பாஜக நேரடி போட்டி! இவை போக மீதமுள்ள 20 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் ஹோட்டல் ஒன்றில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக அறிவித்தது. இதில் அதிமுக சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி (தனி), திருநெல்வேலி, நாகப்பட்டனம் (தனி), மயிலாடுதுறை, திருவள்ளூர் (தனி), காஞ்சிபுரம் (தனி), தென் சென்னை ஆகிய இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

உத்தேச பட்டியல் 
 
 சேலம்- சரவணன் 
நாமக்கல்- பி.ஆர்.சுந்தரம்
 கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி 
ஈரோடு- செல்வகுமார் சின்னையன் 
 கரூர்- தம்பிதுரை 
திருப்பூர்- எம்எஸ்எம் ஆனந்தன் 
 பொள்ளாச்சி- மகேந்திரன் 
ஆரணி- ஆர்விஎன் கண்ணன்
 திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி 
சிதம்பரம் (தனி)- சந்திரகாசி 
பெரம்பலூர்- என் ஆர் சிவபதி 
தேனி- ரவீந்திரநாத் 
மதுரை- கோபாலகிருஷ்ணன் 
 நீலகிரி (தனி)- சரவணகுமார் 
திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன் 
நாகப்பட்டினம் (தனி)- அசோகன் 
 மயிலாடுதுறை- பாரதி மோகன் 
 திருவள்ளூர் (தனி)- வேணுகோபால்
 காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல் 
தென் சென்னை- ஜெயவர்த்தன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.