மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் எஸ்டிபிஐ சார்பில் தெஹ்லான் பாகவி போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
17-ஆவது
மக்களவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதையடுத்து, அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை வெளியிட்டு
வருகின்றனர். தமிழகத்தில் எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்துள்ள
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அந்த கட்சிக்கு ஒரு தொகுதி
வழங்கப்படுவதாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து,
இந்த கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி
ஒதுக்கப்படுவதாக அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று
அறிவித்தார்.
இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சி சார்பில்
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர்
தெஹ்லான் பாகவி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment