
பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் மணிகண்டன் என்பவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பொள்ளாச்சியில்
பெண்களை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வெளியிட்ட குற்றச்சாட்டின்
பெயரில் சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேர்
போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மணிகண்டன் என்பவர் இந்த வழக்கில் தன்னை கைது
செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று
மனுத் தாக்கல் செய்திருந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான முழு
விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மணிகண்டனும் போலீசாரால் தேடப்படுவதாகவும், எனவேதான் இவர்
முன்ஜாமீன் கோரியதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்படும் என்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
பாண்டியராஜன், இன்று அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment