
"மனைவி பக்கத்தில் மகன் படுத்திருக்கிறானா" என்று நடுராத்திரி
டார்ச் அடிச்சு பார்த்த சந்தேக பேய் ஒன்று கடைசியில் பெற்ற மகனையே வெட்டி
கொலை செய்து விட்டது! இந்த கேவலமான மற்றும் கொடூரமான சம்பவம் சென்னை
வளசரவாக்கத்தில் நடந்துள்ளது.
சென்னை வளசரவாக்கம், ராமாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சக்திவேல்.
இவருக்கு வயது 50. மனைவி பெயர் லோகநாயகி. இவர்களுக்கு சதீஷ் என்ற ஒரு
மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நல்லாதான் குடும்பம் போய்க்கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக
சக்திவேலுக்கு சந்தேக நோய் பீடித்துகொண்டது. ஆனால் சந்தேகப்படறதுக்கும் ஒரு
விவஸ்தை வேணாமா? கட்டின மனைவிக்கும், பெற்ற மகனுக்குமிடையே கள்ள தொடர்பு
இருப்பதாக ஒரு சந்தேகம் சக்திவேலுக்கு வந்துவிட்டது.
வேலை இல்லை
கொஞ்சம் கொஞ்சமாக சக்திவேல் இது சம்பந்தமாக மனைவி மற்றும் மகனிடம் தகராறு
செய்து வந்துள்ளார். வேலைக்கு போய்
டார்ச் லைட்
ஆனால் அவர் வேலைக்கு கிளம்பி சென்றால் பின்னாடியே போய் வேவு பார்ப்பதுதான்
சக்திவேல் வேலையே. இரவில் சாப்பிட்டு தூங்க போனால், சக்திவேல் மட்டும்
தூங்காமல் இங்குமங்கும் நடமாடிக் கொண்டே இருப்பாராம். மனைவி பக்கத்தில்
மகன் படுத்திருக்கிறாரா என்று நடுராத்திரி டார்ச் அடிச்சு அடிக்கடி
பார்த்து கொண்டே இருப்பாராம்.
விட்டால் வீட்டில் ஏதாவது
மனைவி-மகனுக்கும் தப்புத்தண்டா நடந்துவிடும் என்று வீட்டிலேயே இருந்து
வந்துள்ளார். கணவன் வேலைக்கு செல்லவில்லையே, நாமாவது வேலைக்கு போய்
குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று மனைவி வேலைக்கு கிளம்பினார்.

டார்ச் லைட்
ஆனால் அவர் வேலைக்கு கிளம்பி சென்றால் பின்னாடியே போய் வேவு பார்ப்பதுதான்
சக்திவேல் வேலையே. இரவில் சாப்பிட்டு தூங்க போனால், சக்திவேல் மட்டும்
தூங்காமல் இங்குமங்கும் நடமாடிக் கொண்டே இருப்பாராம். மனைவி பக்கத்தில்
மகன் படுத்திருக்கிறாரா என்று நடுராத்திரி டார்ச் அடிச்சு அடிக்கடி
பார்த்து கொண்டே இருப்பாராம்.

கத்திகுத்து
ஒரு கட்டத்தில் சந்தேகம் ரொம்ப ஓவராக போய்விடவும், மகனை கொலை செய்யவே
முடிவெடுத்து விட்டார் சக்திவேல். இன்று விடிகாலை வீட்டில் சதீஷ் தூங்கி
கொண்டிருந்தபோது, திடீரென கத்தியை எடுத்து வந்து மகனை சரமாரியாக குத்தினார்
சக்திவேல்.

லோகநாயகி
மகன் வலியால் அலறி துடித்த சத்தத்தை கேட்டு லோகநாயகி ஓடிவந்தார். மகனை
வெறிபிடித்த மாதிரி கத்தியால் குத்தும் கணவனை தடுக்க முயன்றார். ஆனால்
சக்திவேல் லோகநாயகியையும் சரமாரியாக குத்தினார். இதில் லோகநாயகிக்கு கையில்
வெட்டு காயம் ஏற்பட்டது. கண்மூடித்தனமான கத்திகுத்தில் சதீஷ் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது
இதை பார்த்ததும் சக்திவேல் தப்பிஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள்
சக்திவேலை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ராயலா நகர்
போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
சந்தேக புயல் சுழட்டியடித்தால் குடும்பம் சிதைந்து நாசமாகத்தான் போகும்
என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.

No comments:
Post a Comment