
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவுள்ள தொகுதிகள் குறித்து அண்ணா
அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்
2 தினங்களுக்கு முன்பு திமுக கூட்டணி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை இனிதே
முடிந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் முக
ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் பிற கட்சிகளுக்குப் பத்து
தொகுதிகளுமாக கூட்டணி கட்சிகளுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கீடு
செய்யப்பட்டதாகவும் மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுமென்றும்
அறிவித்தார்.
மேலும் மார்ச் 7ஆம் தேதிக்குப் பிறகு, அதாவது இன்றைய தினம், கூட்டணி
கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து இதற்கென
அமைக்கப்பட்ட பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினருடன் சம்பந்தப்பட்ட
கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை முடிவு செய்வார்கள் எனவும்
தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment