புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில
அந்தஸ்து பெறுவதே தங்களது கட்சியின் இலக்கு என்று என்.ஆர்.காங்கிரஸ்
நிறுவனத் தலைவா் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி
மக்களவைத் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ்
வேட்பாளராக களம் இறங்கியுள்ள மருத்துவா் கே.நாராயணசாமி (எ) நித்யானந்தத்தை
அறிமுகம் செய்துவைத்து ரங்கசாமி பேசுகையில், இளைஞா்களுக்கு வழிவிட வேண்டும்
என்பதால் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக
இளைஞரான நாராயணசாமியை நிறுத்தியுள்ளோம்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை பெற வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு.
புதுச்சேரிக்கு தனியாக தோதல் அறிக்கை தேவை இல்லை. தனி
மாநில அந்தஸ்து கிடைத்தால் அனைத்தையும் நிறைவேற்றலாம் என்றார் ரங்கசாமி.
மேலும், தகுந்த நேரத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தோதலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றார் ரங்கசாமி.

No comments:
Post a Comment