அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கனகராஜ் மறைவையடுத்து,சூலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
மாவட்டம் சூலூர் தொகுதியின்அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கனகராஜ் நேற்று காலை
வீட்டில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்குகனகராஜுக்கு, அவரைசோதித்து
பார்த்த மருத்துவர்கள்அவர் உயிரிழந்து விட்டதை அறிந்து அவர் இறந்து
விட்டதாகதெரிவித்தனர்.
இதையடுத்து,
கனகராஜின் மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை
ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் இரங்கல்
தெரிவித்திருந்தனர்.மறைந்த கனகராஜின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்றுஅஞ்சலி
செலுத்திவிட்டு அவரதுகுடும்பத்தினருக்கும்ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து,சூலூர் தொகுதி காலியானதாக இன்று
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் காலியாக உள்ள
21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு (திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி
மற்றும்ஒட்டப்பிடாரம் தவிர)வருகிற மக்களவைத் தேர்தலோடு இடைத்தேர்தல்
நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காலியான சட்டப்பேரவை
தொகுதிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
newstm.in

No comments:
Post a Comment