சிட்னி:
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான
கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்றபோது, மர்ம
நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன்
மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு
தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய
வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் இருந்த வெடிப்பொருட்கள்
செயலிழக்கச் செய்யப்பட்டன.
துப்பாக்கி
சூடு குற்றவாளி "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக
ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான்.
73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன்
தெரிவித்துள்ளான். நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவன்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர்
ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார்.

No comments:
Post a Comment