17-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
வெளியிடப்பட்டுள்ள
வேட்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலும் கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கும்,
பழைய முக்கி புள்ளிகள் மற்றும் மாற்று கட்சியிலிருந்து வந்த
பிரமுகர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மக்கள்வைத்
தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழக அரசியல் களம்
சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான
வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக
தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற மெகா
கூட்டணி உருவாகியுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக
சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த
பட்டியலில் அதிகமாக திமுக தலைவர்களின் வாரிசுகளே களம் காண்கிறார்கள்.
திமுக சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல் இதோ...
* வடசென்னை - டாக்டர். கலாநிதி வீராசாமி (திமுகவின்
முக்கிய தலைவராக இருந்த ஆற்காடு வீரசாமி மகன். வீரசாமி முதுமை காரணமாக
தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி கொண்டதால், அவருடைய மகனான வீ.கலாநிதிக்கு
திமுக மருத்துவ அணி இணைச் செயலாளராக தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது).
* தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
(தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின்
மகள். திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு தற்போது திமுகவின் மகளிரணியில்
முக்கிய பதவி வகித்து வருகிறார். தமிழச்சி என்னும் சுமதி, காவல்துறை
அலுவலரான சந்திரசேகர் என்பவரின் மனைவி)
* மத்திய சென்னை - தயாநிதி மாறன்
(கருணாநிதியின் பேரன், முரசொலி மாறனின் இளைய மகன், முன்னர் தொலைத்தொடர்பு
மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தவர்)
* ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
(1996 முதல் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து 4 முறை மக்களவை
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம்
ஆண்டு வரை கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்துள்ளார்)
* வேலூர் - வீ. கதிர் ஆனந்த்
(திமுக பொருளாளராகவும் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகன் தான்
கதிர் ஆனந்த், சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் வேலூர் தொகுதியை
கைப்பற்றியதால் மகனுக்காக இந்த தொகுதியை கேட்டு வாங்கியிருக்கிறார் )
* கள்ளக்குறிச்சி - பொ. கவுதம சிகாமணி (முன்னாள் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் தான் இந்த கவுதம சிகாமணி)
* தூத்துக்குடி - கனிமொழி (இவர் மறைந்த தலைவர் கருணாநிதியின் மகள். தற்போது, மாநிலங்களவையின் உறுப்பினராக உள்ளார்).
* அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (இவர் 1996 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்றுமுறை அரக்கோணம் தொகுதியிலிருந்து மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்)
* நீலகிரி - ஆ.ராஜா (15-வது மக்களவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர். மக்களவைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்)
* சேலம் - எஸ்.ஆர்.பார்த்தீபன் (இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தேமுதிகவிலிருந்து திமுகவிற்கு தாவியவர்)

No comments:
Post a Comment