மிர்சாபூர், உத்திரப் பிரதேசம்
உ பி மாநில பாஜக தலைவர் மகேந்திர பாண்டேவின் தம்பி மருமகள் அம்ருதா பாண்டே பிரியங்கா காந்தி முன்னிலைல் காங்கிரசில் இணைந்தார்.
உத்திரப்
பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே. இவரது தம்பியின் மருமகள்
அம்ருதா பாண்டே. இவரும் பாஜகவை சேர்ந்தவர். தற்போது காங்கிரஸ் செயலர்
பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே தேர்தல்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள
சுனார் பகுதிக்கு சென்றார்.
அப்போது பிரியங்கா காந்தி முன்னிலையில் அம்ருதா பாண்டே காங்கிரசில் இணைந்தார்.
இது குறித்து அம்ருதா பாண்டே, 'தற்போது பிரியங்கா காந்தி
அதிகார பூர்வமாக அரசியலில் இறங்கி உள்ளார். இனி வரும் காலம் மோடியுடையது
அல்ல காங்கிரசுடையது என்பது அவர் அரசியல் வருகையால் தெளிவாகி உள்ளது. எனவே
பிரதமர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவாரா என்பதே சந்தேகமாக உள்ளது.
இனி
வரும் எதிர்காலம் காங்கிரசுடையதாக இருக்கும் என்பதாலும், எனக்கு காந்தி
குடும்பத்தினர் மீது மரியாதை உண்டு என்பதாலும் நான் காங்கிரசில்
இணைந்துள்ளேன். என்னை பொருத்தவரை தேர்தலில் போட்டியிடுவது முக்கியம் இல்லை.
அதை கட்சி முடிவு செய்யும். ஆனால் பிரியங்காவுடன் இணைந்து பனி புரிய
விரும்பியே நான் கட்சியில் இணைந்தேன்' என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment