சென்னை: இதுதான் கமல்.. எடுத்த எடுப்பிலேயே முதல் பட்டியலிலேயே 2 முஸ்லீம் வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்து அசத்தி விட்டார்.
பொதுவாக
கமல் மீது வைக்கப்படும் விமர்சனம், இந்துத்துவவாதி... பாஜகபின் பிம்பம்,
மத்திய அரசின் எடுபிடி என்றுதான் திணிக்கப்பட்டு வரும் வார்த்தைகள்.
இன்னொரு
பக்கம் மதவாத கொள்கைக்கு எதிரானவர்.. கம்யூனிசவாதி.. பகுத்தறிவுவாதி..
சுருக்கமாக "கமலின் நிறம் சிவப்பு" என்பதுதான்! அதனால்தான் விஸ்வரூபம் படம்
வந்தபோது கமலுக்கு எதிரான அம்புகள் பாய தொடங்கின.
கமல்
விஸ்வரூபம்
விஸ்வரூபம்
அந்த படத்தின் சில காட்சியை நீக்குவதாக கமல் ஒப்புக் கொண்டு, இன்னும் சொல்லப்போனால் ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டார்.
அதாவது கமலின் கையை முறுக்கி கையெழுத்திட வைத்த ஒன்றாகவே அந்த நிகழ்வு அமைந்திருந்தது.
மக்கள் நீதி மய்யம்
கமீலா நாசர்
கமீலா நாசர்
ஆனால்
இன்றைக்கு கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் 2 முஸ்லிம்கள் பெயர்
கண்ணில் பட்டு மனதை ஈர்த்துள்ளது. மத்திய சென்னையில் கமீலா நாசர்,
மயிலாடுதுறை - ரிபாயுதீன் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக, திமுக
இஸ்லாமியர்கள்
அதிகம் வசிப்பதால் அவர்களை கவர இந்த வேட்பாளர்களை கமல்
நிறுத்தியிருப்பதாகவே எடுத்து கொண்டாலும், அதைகூட அதிமுக, திமுக
செய்யவில்லை என்பதுதான் விசித்திரம்!
அடுத்த பட்டியல்?
அந்த
வகையில் கமலை மனசார பாராட்டலாம். இன்னும் அடுத்த கட்ட பட்டியல் பாக்கி
உள்ளது. அதிலும் ஏதாவது சர்பிரைஸ் வைத்துள்ளாரா கமல் என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:
Post a Comment