Latest News

வெடிக்க காத்திருக்கும் 'ஏகே 47'.. மிரட்ட தயாராகும் ஜெகத்ரசட்சகன்.. அனல் பறக்கும் அரக்கோணம்!

பாமக-திமுக நேரிடையாக மோதும் அரக்கோணம் தொகுதி இறுதியில் யாருக்கு போக போகிறது? என்ற ஆர்வம் அதிகமாகி வருகிறது.

திமுக-பாமக நேரிடையாக களமிறங்கும் மிக முக்கிய தொகுதிகளில் ஒன்றுதான் அரக்கோணம். அரக்கோணத்தை பொறுத்தவரை திமுக-பாமக இரண்டிற்குமே கணிசமான வாக்குகள் இருந்தாலும் போன முறை அதிமுக தனியாக நின்று ஜெயித்தே விட்டது. ஆனால் இந்த முறை பாமகவுக்கு அதிமுக ஒதுக்கி உள்ளது.

பாமகவின் மிக முக்கியமான நபர்.. கட்சியின் ஏகே 47 என்று அழைக்கப்படும் ஏ.கே. மூர்த்திதான் அரக்கோணத்தில் களம் இறங்குகிறார். இவருக்கு போட்டியாக திமுக சார்பில் ஜெகத்ரெட்சகன் களம் இறங்குகிறார்.

நேருக்கு நேர்
விட்டதை பிடிப்பாரா?
நேருக்கு நேர் மோதும் நபர் பலம் பொருந்திய திமுக வேட்பாளராக ஜெகத் ரட்சகன்தான் போட்டியிட உள்ளார்! அது மட்டுமில்லை, கடந்த 2 முறை தேர்தலில் விட்டதை இந்த 3-வது முறை மூர்த்தி பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் கூடி உள்ளது.

பிரபலமானவர்கள்
செல்வாக்கு
ஜெகத்ரெட்சகன், ஏகே மூர்த்தி, இவர்கள் இருவருக்குமே அறிமுகம் தேவையில்லை. செல்வாக்கு மிக்கவர்கள். அதனால் தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும். ஏகே மூர்த்தியை பொறுத்தவரை கட்சியில் செல்வாக்கு இருந்தாலும், தொகுதி மக்களிடம் அவ்வளவாக நல்ல பெயர் இல்லை என்றே சொல்லப்படுகிறது. இதைதவிர மத்திய-மாநில அரசுகள் மீதுள்ள வெறுப்பும் இவர் மீது தொகுதியில் பிரதிபலிக்கும் என்றே தெரிகிறது. இருந்தாலும் வடமாவட்ட வன்னியர்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய அமைச்சர்
முழு ஒத்துழைப்பு
ஜெகத்ரட்சகனை பொறுத்தவரை முன்னாள் மத்திய அமைச்சர். இவருக்கு கட்சியின் முழு ஒத்துழைப்பு உள்ளது. அதிமுக-பாஜக மீதான அதிருப்தி இவருக்கு சாதகமாக உள்ளது. பணபலம் உள்ளவர் என்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்.

திமுக
உதயநிதி
எப்படியும் பாமகவை தோற்கடிக்க திமுக கங்கணம் கட்டி வருவதால், ஜெகத்ரட்சகனுக்கு பிரச்சாரம் செய்ய திமுக முழு ஒத்துழைப்பு தரும். அதிலும் இளசுகளின் வாக்குகளை அள்ள உதயநிதி ஸ்டாலின் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்வார் என கூறப்படுகிறது. பார்ப்போம்.. ஜெயம் ஜெகத்துக்கா? அல்லது ஏகே 47-க்கா என்று!

source: oneindia.com





No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.