
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.
தமிழகத்தில்
திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும்
போட்டியிடுகின்றன. டிடிவி தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய
கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.
கருத்து கணிப்பு முடிவுகள்
இந்நிலையில்.. நாடு முழுவதும் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்
என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், விஎம்ஆர் என்ற நிறுவனமும் கருத்து
கணிப்புகளை நடத்தின. அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.
283 தொகுதிகளில் வெற்றி
மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி 283 தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சி
அமைக்கும் என்று அந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
காங்கிரஸ் கூட்டணிக்கு 125 தொகுதிகளே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக படுதோல்வி
மற்ற மாநிலங்களில் பாஜக கூட்டணி வென்றாலும் தமிழகத்தில் அந்த கூட்டணி
படுதோல்வி அடையும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம்
உள்ள 39 தொகுதிளில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் கிடைக்கும் என்றும்,
அதிமுக கூட்டணிக்கு வெறும் 5 இடங்களே கிடைக்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதத்தில் முன்னிலை
வாக்குசதவீதம் அடிப்படையிலும் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது.
மொத்தமுள்ள வாக்குகளில் 52.20 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு
கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 37.20 சதவீதம்
வாக்குகள் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகள் 10.06 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment