டெ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்பி கனிமொழி இன்று
டெல்லியில் சந்தித்து முக்கியமான ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக கூட்டணி, மற்றும் தொகுதி
பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் பிரதான கட்சிகளிடையே மறைமுகமாகவும்,
நேரிடையாகவும் நடந்து வருகிறது.
இதில் திமுக-காங்கிரஸ்தான் முதலாவதாக தங்கள் கூட்டணியை உறுதி செய்து
அறிவித்தது. எனினும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி
ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
திமுக கறார்
காங்கிரஸ் 12 சீட்களுக்கு குறையாமல் கேட்க, திமுக அதற்கு திட்டவட்டமாக நோ
சொல்லிவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே சிங்கிள் டிஜிட் சீட்தான் தர வேண்டும்
என்பதில் திமுக கறாராக இருந்து வருகிறது.
இழுபறி
ஏனெனில் காங்கிரசின் ஓட்டு வங்கி இப்போது குறைந்துவிட்டதாலும், கடந்த
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வழங்கிய பெரும்பாலான தொகுதிகளில்
அதிமுக வெற்றி பெற்றதாலும் திமுக தரப்பு அதிக தொகுதிகள் தர யோசிப்பதாக ஒரு
பேச்சு எழுந்தது.

டெல்லியில் முகாம்
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு வருவதுடன், மூத்த தலைவர்களுடனும்
ஆலோசனை நடத்தி வருகிறார்.
கனிமொழி சந்திப்பு
இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுக எம்பி
கனிமொழி சந்தித்து பேசியிருக்கிறார். ராகுல் காந்தியின் வீட்டில் நடைபெற்ற
இந்த சந்திப்பின்போது, கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து கனிமொழி
விவாதித்திருப்பதாக தெரிகிறது. அப்போது காங்கிரஸ் தரப்பு 15 தொகுதிகளை
கேட்டதாகவும், ஆனால் திமுக 8 தொகுதிகளை மட்டுமே தர முன் வந்ததாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி பங்கீட்டு குழு
இந்த சந்திப்பு இத்துடன் முடியாது என்றும் அடுத்த கட்டமாக மேலிடத்தின்
ஆலோசனையைப் பெற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொகுதிப்
பங்கீ்ட்டுக் குழுவினர் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன்
பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment