அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆர்பிஐ இயக்குநர் குழுக் கூட்டம்
நிறைவடைந்துவிட்டதாம். இப்போது அருண் ஜெட்லி மற்றும் சக்திகாந்ததாஸ்
சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து வருகிறார்கள்.
பொதுவாக
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிவித்த பின் அரசும், மத்திய ரிசர்வ் வங்கியும்
சேர்ந்து அமர்ந்து பேசுவது வழக்கம் அப்படிப்பட்ட ஒரு சாதாரண ஆர்பிஐ
இயக்குநர் குழு கூட்டம் தான் இப்போது நடந்தது.
ஆனால் இதில் அரசு அர்பிஐ அமைப்பிடம் இருந்து ஈவுத் தொகையை வாங்கவிருப்பதால் இந்த கூட்டம் சூடுபிடித்தது.

சொல்ல முடியாதுங்க.
கோட்டக்
வங்கியின் புரொமோட்டர்கள் தொடர்பான சர்ச்சைக்கு பதிலளிக்க
மறுத்துவிட்டார். இந்தியாவின் இருக்கும் வங்கிகளின் தலைமை அதிகாரிகளோடு
வங்கிக் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்க பேச்சு வார்த்தை நடத்த
இருக்கிறாராம்.

அறிவிப்பு வெளியாகும்
ஆர்பிஐ
இயக்குநர் குழு தொகையை முடிவு செய்த உடன் மத்திய அரசுக்கான டிவிடெண்ட்
அறிவிக்கப்படும் என நாசூக்கக, அபிஐ ஈவுத் தொகை தர இருப்பதைச்
சொல்லிவிட்டார். ஆனால் அந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்த இருப்பது
முன்னாள் ஆர்பிஐ கவர்னர் பிமல் ஜலான். ஆகவே எவ்வளவு தொகை, எப்போது கொடுக்க
இருக்கிறார்கள் என்பதை எல்லாம் அவர்கள் முடிவு செய்வார்கள் எனச்
சொல்லிவிட்டார் சக்தி காந்த தாஸ்

அருண் ஜெட்லி
ஆண்டுக்கு
ஆண்டு இந்திய அரசுக்கு வரும் வருவாய் அதிகரித்த வண்னமெ இருந்திருக்கிறது.
இது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த கால்த்தில் இருந்தே பார்க்க
முடிகிறது என அருண் ஜெட்லி சொல்லி இருக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய
வங்கிகள் தேவையாக இருக்கிறது. இந்த பெரிய வங்கிகள் மூலம் தான் குறைந்த
விலையில் கடன் தருவது தொடங்கி இருக்கும் பணத்தை இந்தியப் பொருளாதாரத்துக்கு
முழுமையாக தருவதை வரை அத்தனைப் பெரிய பொருளாதார உதவிகளை செய்ய வேண்டி
இருக்கிறது

வளர்ச்சி
ஆர்பிஐ
கணக்குப் படி, கடந்த காலங்களிலும் இந்திய வங்கிகளில் கடன் கொடுப்பதில்
வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. இந்தியப் பொருளாதாரத்தின்
முதுகெழும்புகளான சிறு குரு தொழில் முனைவோர்களுக்கான கடன்களை வழங்குவது
இந்திய வங்கிகளின் கையில் தான் இருக்கிறது. ஜனவரி 2019-ல் மத்திய அரசு
அறிவித்த புதிய கடன் திட்டங்களை தங்கள் வங்கிகளில் அமல்படுத்தி சரியான
தொழில்முனைவோர்களைக் கண்டு பிடித்து தர வேண்டிய தேசப் பொறுப்பும்
வங்கிகளுக்கே இருக்கிறது.
No comments:
Post a Comment