புதுடில்லி: 391 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள்... என்று தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2655 வேட்பாளர்களில் 391 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஏடிஆர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 391 பேர் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
254
பேர் கடுமையான குற்ற பின்னணி கொண்டவர்களாகவும், 4 பேர் கொலை வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டவர்களாகவும், 25 பேர் கொலை முய்றசி வழக்கில்
தொடர்புடையவர்களாகவும், 23 பேர் பாலியல் பலாத்கார வழக்கில்
தொடர்புடையவர்களாகவும் உள்ளனர்.
கட்சி அடிப்படையில் குற்றப்
பின்னணி உடையவர்களில் பா.ஜ., முதலிடத்திலும், காங்., 2வது இடத்திலும்
உள்ளன. பா.ஜ., சார்பில் போட்டியிடும் 224 பேர் 83 பேர் கிரிமினல்கள்.
காங்.,ன் 220 வேட்பாளர்களில் 59 பேர் குற்றவாளிகள்.
மதசார்பற்ற
ஜனதா தளத்தின் 199 வேட்பாளர்களில் 41 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள்.
இத்தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
No comments:
Post a Comment