233 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்ததது. ஓட்டல்களில் 5 சதவீத ஜிஎஸ்டி வரியே வசூலிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி
எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் கடந்த ஜூலை 1-ம் தேதி
அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30க்கும்
மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில்
விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது;
சில சொகுசு பொருட்களுக்கு கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.
இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இதைத்
தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட
வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதைத்
தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் 233 பொருட்களுக்கான
ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டது. அதிகபட்ச வரியான 28 சதவீத பட்டியலில்
இருந்து பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத வரி பட்டியலில் கொண்டு
வரப்பட்டது. தற்போது, 28 சதவீத வரையறைக்குள் 50 பொருட்கள் மட்டுமே
வருகின்றன.
அனைத்து வகையான ஓட்டல்களுக்கும் 5 சதவீத வரியாக
குறைக்கப்பட்டது. ஷேவிங் க்ரீம், ஷேவிங் லோஷன், பற்பசை, ஷாம்பூ, அழகுசாதனப்
பொருட்கள், பெண்களுக்கான முக அழகு க்ரீம், சுவிங்கம், சாக்லெட், உள்ளிட்ட
பொருட்களுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட வரி
விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

No comments:
Post a Comment